1/8
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) screenshot 0
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) screenshot 1
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) screenshot 2
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) screenshot 3
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) screenshot 4
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) screenshot 5
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) screenshot 6
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) screenshot 7
புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) Icon

புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram)

QCare Technologies
Trustable Ranking Icon인증완료
1K+다운로드
2MB크기
Android Version Icon4.0.1 - 4.0.2+
안드로이드 버전
1.0.2(10-10-2020)최신 버전
-
(0 리뷰)
Age ratingPEGI-3
다운로드
세부 정보리뷰버전정보
1/8

புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram)의 설명

பத்ஹுல் பாரி: மாபெரும் இஸ்லாமிய கலைக் களஞ்சியம்


இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) (கி.பி 1372-1448) அவர்கள் அல்குர் ஆனுக்கு அடுத்தபடியாக நம்பகத்தன்மையில் கூடிய ஹதீஸ் கிரந்தமான "ஸஹீஹுல் புகாரி" கிரந்தத்துக்கு வழங்கிய தன்னிகரற்ற விரிவிரை நூலே "பத்ஹுல் பாரி" யாகும்.


இதன் முக்கியத்துவத்தை இமாம் ஷௌகானி (ரஹ்) அவர்களிடம் "நீங்கள் ஸஹீலுல் புஹாரிக்கு ஒரு விரிவுரை எழுதக் கூடாதா"? எனக் கேட்கப்பட்ட போது "பத்ஹுல் பாரி எழுதப்பட்டதன் பின் மீண்டுமொரு விரிவுரை எழுத வேண்டிய அவசியமில்லை" என இமாம் அவர்கள் அளித்த பதில் பத்ஹுல் பாரி யின் முக்கியத்துவத்துக்கு சாண்றாகவும் அறிஞர் பெருமக்கள் மத்தில் பத்ஹுல் பாரி பெற்றிருந்த நன்மதிப்பையும் விளக்குகிறது.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் முப்பது ஆண்டுகாலமாக எழுதிய இவ்விரிவுரை நூலில் தனது ஒட்டு மொத்த அறிவையும் பதிவுசெய்துள்ளார்கள் என்றால் மிகையாகாது.


இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 813ம் ஆண்டு தனது விரிவுரையின் முன்னுரையான "அல் ஹத்யுஸ் ஸாரி" யை எழுத ஆரம்பித்தார்கள். பின்பு பத்ஹுல் பாரியை 817ம் ஆண்டு ஆரம்பித்து 842ம் ஆண்டு எழுதி முடித்தார்கள்.


எழுதி முடித்தை கொண்டாட வேண்டி மிகப் பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.அறிஞர் பெருமக்கள், ஆட்சியாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் அதில் கலந்து கொண்டனர். கவிஞர்கள் இமாம் அவர்களின் தன்னிகரில்லாப் பணியையும் நூலின் அருமை பெருமைகளையும் பாடி இயற்றப்பட்ட கவிதைகளை பத்ஹுல் பாரியின் பதின் மூண்றாம் பாகத்தில் எம்மால் காணக் கூடியதாக உள்ளது.


ஸஹீஹுல் புகாரிக்கு ஏற்கனவே எழுதப்பட்டிருந்த விரிவுரை நூற்களை நுணுக்கமாக வாசித்து அதன் கருத்துக்களை துல்லியமாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அக்கருத்துக்களின் சரி பிழைகளை இமாம் அவர்கள் பத்ஹுல் பாரியில் பக்க சார்பின்றி விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ளது பத்ஹுல் பாரியின் சிறப்புகளுக்கு மகுடம் வைத்தது போல் அமைந்துள்ளது.


இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ஸஹீஹுல் புஹாரியை தொகுத்ததன் நோக்கம், அவ்வாறு தொகுக்கும் போது கடைப்பிடித்த ஒழுங்கு முறைகள் மற்றும் நிபந்தனைகள், இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ஸஹீஹுல் புஹாரியில் இட்டுள்ள பாடத்தலைப்புகள், அத்தலைப்புகளுக்குக்குப் பின்னால் மறைந்துள்ள இமாம் புஹாரி (ரஹ்) அவர்களது அறிவுக் கூர்மை மற்றும் சுயேட்சையான ஆய்வு முறை என சகலதையும் பத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அழகாக படம்பிடித்துள்ளார்கள்.ஆதாரங்கள் அடிப்படையில் விவரித்துள்ளார்கள்.


அதே போன்று இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸை சட்ட விளக்கம் என்ற காரனத்தைக் கவனத்திற் கொன்டு எவ்வாறு வெவ்வேறு தலைப்புகளில் துண்டு துண்டாக பதிவு செய்துள்ளார்கள். ஒரே ஹதீஸை எவ்வாறு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் வெவ்வேறு அறிவிப்பாளர் வரிசைகளுடன் பதிவு செய்துள்ளார்கள், இது தொடர்பில் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கடைப்பிடித்துள்ள நுணுக்கமான முறைமைகள் என்பது தொடர்பிலும் ஆழமான விளக்கங்களை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரி நெடுகிலும் ஆங்காங்கே விளக்கியுள்ளார்கள்.


குறிப்பாக ஒரு ஹதீஸின் பல் வேறுபட்ட வடிவங்கள் என்ன, அவைகளில் இடம் பெறும் வசனங்கள் மற்றும் சொற்பிரயோகங்கள் யாவை அவைகளுக்கா மொழியியல் விளக்கங்கள் என்ன ,அவைகளில் எதை எதற்காக எடுக்க்க வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பது போன்ற ஆய்வியல் வழி முறைகளையும் அழகுற தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


இதற்கும் அப்பால், ஒரு ஹதீஸை எப்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதா மறுக்கத்தக்கதா என்பதை தரம் பிரித்து அறிந்து கொள்வது ஹதீஸ்களுக்கிடையில் அறிவிப்பாளர் வரிசைகளிலும் மூல வாக்கியங்களிலும் காணப்படும் முரண்பாடுகளை எவ்வாறு களைந்து ஹதீஸ்களை சரியான வடிவில் புரிந்து கொள்வது என்பதையும் ஆழமாக எடுத்தெழுதியுள்ளார்கள்.


ஒரு ஆய்வாளனுக்கு அவசியமான ஹதீஸ் கலைகள், சட்டக் கலைகள், அல்குர் ஆன் விளக்க முறைகள் போன்ற இன்னோரன்ன துறைகளில் உள்ள கோட்பாட்டு விளக்கங்களையும் நடைமுறை உதாரனங்களையும் இமாம் அவர்கள் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு அதிகளவில் நூல் முழுவதும் அள்ளித் தெளித்துள்ளார்கள் என்பதையும் நாம் காண்கின்றோம்.


ஆக மொத்தத்தில், பத்ஹுல் பாரி ஒவ்வொரு இஸ்லாமிய மாணவரும் ஆய்வாளரும் படித்துப் பயன் பெற வேண்டிய "மாபெரும் இஸ்லாமிய கலைக் களஞ்சியம்" என்பதில் சந்தேகமில்லை.


புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) - 버전 1.0.2

(10-10-2020)
다른 버전들
뭐가 새롭나Minor Bug Fixingfavorites hadees feature Added

아직 평가나 리뷰가 없습니다! 첫 번째로 남겨 보세요

-
0 Reviews
5
4
3
2
1

புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram) - APK 정보

APK 버전: 1.0.2패키지: com.qcare.pulukulmaram
안드로이드 호환: 4.0.1 - 4.0.2+ (Ice Cream Sandwich)
개발자:QCare Technologies권한:0
이름: புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram)크기: 2 MB다운로드: 3버전 : 1.0.2출시 날짜: 2020-10-10 10:15:13최소 스크린: SMALL지원되는 CPU:
패키지 ID: com.qcare.pulukulmaramSHA1 서명: A4:82:BA:AA:33:7E:AF:43:44:3F:04:9C:D5:55:65:77:79:F6:56:C6개발자 (CN): Android단체 (O): Google Inc.로컬 (L): Mountain View나라 (C): US주/시 (ST): California패키지 ID: com.qcare.pulukulmaramSHA1 서명: A4:82:BA:AA:33:7E:AF:43:44:3F:04:9C:D5:55:65:77:79:F6:56:C6개발자 (CN): Android단체 (O): Google Inc.로컬 (L): Mountain View나라 (C): US주/시 (ST): California

புலுகுல் அல்-மராம் தொகுப்பு (Bulugh-Al-Maram)의 최신 버전

1.0.2Trust Icon Versions
10/10/2020
3 다운로드2 MB 크기
다운로드